"க்ருʼஷ்ணேர ஸம்ʼஸார கோரோ சாடி அனாசார (பக்திவினோத டாகுர). எங்களுடைய பிரச்சாரம் யாதெனில், வாருங்கள் நாம் கிருஷ்ணரின் குடும்பத்தில் ஒரு அங்கத்தினராகலாம். அதுதான் எங்கள் திட்டம். மேலும் நாம் கிருஷ்ணரின் குடும்பத்தில் நுழைந்தால்... எவ்வாறு என்றால் கிருஷ்ணர் அவருடைய துணைவியுடன் அனுபவித்துக் கொண்டிருப்பது போல். எனவே அங்கு ஒரு மறுப்பும் இல்லை; அனைத்தும் அங்கிருக்கிறது. கிருஷ்ணர் உட்கொள்கிறார், கிருஷ்ணர் அனுபவிக்கிறார், கிருஷ்ணர் நடனமாடுகிறார், கிருஷ்ணர் அவருடைய பிரசாதத்தை வழங்குகிறார்— வாங்கிக் கொண்டு திருப்பி கொடுக்கிறார். எதுவும் மறுக்கப்படவில்லை. நாம் கிருஷ்ண உணர்வில் வாழ்ந்தால், பிறகு நாம் நூறு, ஆயிரம் அல்லது எத்தனை ஆண்டுகள் வேண்டுமென்றாலும் வாழலாம். உண்மையில் நாம் இறப்பதில்லை. பிறப்பு மேலும் இறப்பு என்பது என்ன? அது நம்முடைய இந்த உடலுக்கு. எனவே நாம் நித்தியமானவர்கள்; கிருஷ்ணர் நித்தியமானவர்."
|