TA/700505b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"கிருஷ்ணர் பகவத் கீதையிலும் விளக்குகிறார்...
கிருஷ்ணரிடம்... கர்மிகள், அவர்கள் வேலை செய்கிறார்கள். ஆனால் கிருஷ்ணர் கூறுகிறார், 'சரி, நீங்கள் செய்யுங்கள்.' யத் கரோஷி: 'நீங்கள் எதைச் செய்தாலும், நீங்கள் சும்மா எனக்காக செய்யுங்கள், மேலும் அதன் பலனை என்னிடம் கொடுத்துவிடுங்கள்'. அதுதான் கிருஷ்ண உணர்வு. நீங்கள் வேலை செய்யலாம். நீங்கள் ஒரு பெரிய தொழிற்சாலை வைத்திருக்கலாம், வேலை செய்துக் கொண்டிருக்கலாம்— ஆனால் அதன் பலனை கிருஷ்ணரிடம் கொடுத்துவிடுங்கள். பிறகு உங்களுடைய, அந்த தொழிற்சாலையை நடத்துவது, நாங்கள் எங்கள் கோவிலை நடத்துவது போல் நன்றாக இருக்கும், ஏனென்றால் இறுதியில் அதன் லாபம் கிருஷ்ணரிடம் அளிக்கப்படுகிறது. எங்கள் சக்தியை செலவிட்டு, நாங்கள் ஏன் இந்த கோவிலுக்கு வேலை செய்கிறோம்? கிருஷ்ணருக்காக. எனவே எத்தகைய செயலாக இருந்தாலும், நீங்கள் அதை கிருஷ்ணருக்காக பயன்படுத்தினால், அதுதான் தேவைப்படுகிறது. அந்த நோக்கத்தோடு நீ செய்யலாம். ஜிஜீவிஷேச் சதம்ʼ ஸமா꞉ (இஸோ 2). இல்லையேல், நீங்கள் சிக்கிக்கொள்வீர்கள்; நீங்களே பொறுப்பாவீர்கள். ஏனென்றால் நீங்கள் வேண்டுமென்றே செய்தாலும் அல்லது தற்செயலாக செய்தாலும், நாம் பல பாவச்செயல்களை செய்கின்றோம்." |
700505 - சொற்பொழிவு ISO 03 - லாஸ் ஏஞ்சல்ஸ் |