"இந்த பிரபஞ்சத்தில், பௌதிக உலகில் மேலும் ஆன்மீக உலகில் நாம் பார்ப்பது எதுவாக இருந்தாலும், ஆன்மீக உலகம் கிருஷ்ணரின் அந்தரங்க சக்தியின் விரிவாக்கம், மேலும் இந்த பௌதிக உலகம் பகிரங்க சக்தியின் விரிவாக்கம், இன்னும் நாம், இந்த ஜீவாத்மாக்கள், நடுதர சக்தியின் விரிவாக்கம். ஆக மூன்று சக்திகள். அவருக்கு பல சக்திகள் உள்ளன. அனைத்து வகையான சக்திகளும் மூன்று விதமான தலைப்பில் குழுவாக பிரிக்கப்பட்டுள்ளன: அந்தரங்க-ஷக்தி, பஹிரங்க-ஷக்தி, தடஸ்தா-ஷக்தி. அந்தரங்க-ஷக்தி என்றால் அந்தரங்க சக்தி; பஹிரங்க-ஷக்தி என்றால் பகிரங்க சக்தி; மேலும் தடஸ்தா-ஷக்தி என்றால் இந்த ஜீவாத்மாக்கள். நாம் சக்தியாவோம். நாம் ஆற்றல் ஆவோம்."
|