"நம்மிடம் இல்லாத பொருளை பெற வேண்டும் என்ற கவலை எங்களுக்கு இருந்தது. அதுதான் காங்க்ஷதி, பெறுவதிற்கு ஏங்குவது. மேலும் பொருள்கள் தொலைந்து போனால், நாம் புலம்புகிறோம். ஆனால் கிருஷ்ணர் தான் மையப்புள்ளி என்று நாம் அறிந்துக் கொண்டால், பிறகு பெற்றது எதுவாக இருந்தாலும், ஆதாயம், லாபம், அது கிருஷ்ணரின் விருப்பம். கிருஷ்ணர் கொடுக்கிறார்; ஏற்றுக் கொள்கிறோம். மேலும் கிருஷ்ணர் அதை எடுத்துக் கொண்டால், பிறகு எதற்காக புலம்புகிறோம்? கிருஷ்ணர் என்னிடமிருந்து அதை எடுத்துக் கொள்ள விரும்புகிறார். ஓ, நான் ஏன் புலம்ப வேண்டும்? ஏனென்றால் ஏகத்வம், அந்த பூரணமானவர், காரண காரணங்களுக்கெல்லாம் காரணமானவர் அவரே. அவர் எடுத்துக் கொள்கிறார்; அவரே தான் கொடுக்கிறார்."
|