"ஏதோ ஒரு வழியில், நாம் கிருஷ்ண உணர்வை உருவாக்கிக் கொண்டால், பிறகு உடனடியாக நாம் தூய்மை அடைந்துவிடுவோம். அதுதான் செயல்முறை. கிருஷ்ணர் எல்லோருக்கும் வாய்ப்பு கொடுக்கிறார். கம்ஸனைப் போல். கம்ஸன் கிருஷ்ணரைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தார். அவரும் கிருஷ்ண பக்தராக இருந்தார், எப்பொழுதும் கிருஷ்ணரைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தார், 'ஓ, நான் எவ்வாறு கிருஷ்ணரை கண்டுப்பிடிக்கப் போகிறேன்? நான் அவனைக் கொண்றுவிடுவேன்'. அதுதான் அவனுடைய வேலை. அதுதான் அசுர மனநிலை. ஆஸுரிம்ʼ பாவம் ஆஷ்ரிதா꞉ (ப.கீ. 7.15). ஆனால் அவனும் தூய்மையானவனாக மாறிவிட்டான். அவன் வீடுபேறு பெற்றான்."
|