"எனவே இந்த ஈஷோபநிஷத், நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று கற்பிக்கிறது. நாம் அதிகமாக முன்னேற்றம் அடையக் கூடாது... நாம் முன்னேற்றம் அடைந்திருக்கலாம். அது முக்கியமல்ல. நீங்கள் பௌதிக கல்வியில் முன்னேற்றம் அடையாதீர்கள் என்று நாங்கள் சொல்லவில்லை. நீங்கள் முன்னேறுங்கள், ஆனால், அதே நேரத்தில், கிருஷ்ண உணர்வுடன் இருங்கள். அதுதான் எங்கள் பிரச்சாரம். நாங்கள் சொல்லவில்லை அதாவது... நீங்கள் வாகனங்களை உற்பத்தி செய்யாதீர்கள் அல்லது நீங்கள் அதிகமான இயந்திரங்களை உற்பத்தி செய்யாதீர்கள். நாங்கள் சொல்லவில்லை. ஆனால் நாங்கள் சொல்வது, 'சரி, நீங்கள் இந்த இயந்திரங்களை உற்பத்தி செய்திருக்கிறீர்கள், இதை கிருஷ்ணரின் சேவையில் பயன்படுத்துங்கள்'. அதுதான் எங்கள் முன்மொழிவு. அதை நிறுத்துங்கள் என்று நாங்கள் சொல்லவில்லை. நாங்கள் சொல்லவில்லை அதாவது நீங்கள்... பாலியல் வாழ்க்கையில் ஈடுபடாதீர்கள். ஆனால் நாங்கள் கூறுகிறோம், 'ஆம், நீங்கள் பாலியல் வாழ்க்கையில் ஈடுபடுங்கள்—கிருஷ்ணருக்காக. நீங்கள் கிருஷ்ண உணர்வுள்ள குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள். நூறு முறை பாலியல் வாழ்க்கையில் ஈடுபடுங்கள். ஆனால் பூனைகளையும் நாய்களையும் உருவாக்காதீர்கள்'. அதுதான் எங்கள் முன்மொழிவு."
|