"இந்த உடலுக்கு மீண்டும் மீண்டும் பிறப்பதிலிருந்தும் மேலும் இறப்பதிலிருந்தும் இன்னும் நோய் மேலும் முதுமை இதிலிருந்து உங்களால் நிவாரணம் அளிக்க முடியாது. எனவே மக்கள் ஒவ்வொரு கணமும் இந்த உடல் சிதைந்துக் கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருப்பினும், இந்த உடலைப் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்வதில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். உடலின் இறப்பு அவர் பிறந்தவுடனே பதிவு செய்யப்பட்டுவிட்டது. அதுதான் உண்மை. எனவே இந்த உடலின் இயற்கையான நடப்பை உங்களால் தடுக்க முடியாது. உடலின் இந்த செயல்முறையை நீங்கள் சந்தித்தேயாக வேண்டும், பிறப்பு, இறப்பு, முதுமை, மேலும் நோய்."
|