"வித்யாம் அவித்யாம் ச: இரண்டு பக்கங்கள், இருளும் ஒளியும். எனவே உங்களுக்கு இரண்டு விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும்: மாயா என்றால் என்ன மேலும் கிருஷ்ணர் என்றால் என்ன. அப்பொழுதுதான் உங்கள் அறிவு நிறைவானது. நிச்சயமாக, கிருஷ்ணர் மிகவும் நல்லவர், அதாவது அவர் எப்படியோ, நீங்கள் கிருஷ்ணரிடம் சரணடைந்தால், பிறகு உங்கள் அனைத்து வேலையும் முடிவு பெறும். நீங்கள் கிருஷ்ணரிடம் முழுமையாக சரணடைந்தால், நீங்கள் தானாக மாயா யார் என்பதை கற்றுக் கொள்வீர்கள். கிருஷ்ணர் மனத்தினுள் இருந்துக் கொண்டு உங்களுக்கு அறிவை கொடுப்பார்."
|