"கர்மீஸ் அல்லது ஜ்ஞானீஸ் அல்லது யோகி, அவர்கள் எப்பொழுதும்... அவர்கள் ஒவ்வொறுவரும், மேன்மையடை முயற்சி செய்கிறார்கள். மேலும் அவர்களுக்கும் மேல் பக்தர்கள் இருக்கிறார்கள். எனவே பக்தர்கள்தான் மிகவும் உயர்ந்த நிலையில் இருகிறார்கள், ஏனென்றால் பக்தி தொண்டின் மூலம்தான் பகவான் யார் என்பதை உங்களால் புரிந்துக் கொள்ள முடியும். பக்த்யா மாம் அபிஜானாதி (ப.கீ. 18.55), கிருஷ்ணர் கூறுகிறார்: 'கர்மாவால் என்னை ஒருவர் புரிந்துக் கொள்ள முடியும்' என்று அவர் சொல்லவில்லை. 'ஜ்ஞானத்தால் என்னை ஒருவர் புரிந்துக் கொள்ள முடியும்' என்று அவர் சொல்லவில்லை. 'யோகாவால் என்னை ஒருவர் புரிந்துக் கொள்ள முடியும்' என்று அவர் சொல்லவில்லை. அவர் தெளிவாக கூறுகிறார், பக்த்யா மாம் அபிஜானாதி: 'வெறுமனே பக்தி தொண்டினால் ஒருவர் என்னை புரிந்துக் கொள்ளலாம்'. யாவான் யஷ் சாஸ்மி தத்த்வத꞉ (ப.கீ. 18.55). அவரை அவர் உள்ளபடியே அறிவது, அதுதான் பக்தி. எனவே பக்தி தொண்டைத் தவிர, பூரண் உண்மையை வேறு வழியில் புரிந்துக் கொள்ளும் சாத்தியம் இல்லை."
|