"எனவே கிருஷ்ணரை உற்று நோக்கும் கண்களால் பார்க்க முயற்சி செய்யுங்கள்—'கிருஷ்ணர் எங்கே இருக்கிறார்'? இதோ இருக்கிறார்... கிருஷ்ணர் உங்கள் இதயத்தினுள் இருக்கிறார். ஈஷ்வர꞉ ஸர்வ-பூதானாம் (ப.கீ.18.61). அவர் அணுக்குள்ளும் இருக்கிறார். அவர் எங்கும் இருக்கிறார். ஆக சேவை செய்வதன் மூலம், நாம் உணரலாம். அத꞉ ஷ்ரீ-க்ருʼஷ்ண-நாமாதி ந பவேத் க்ராஹ்யம் இந்த்ரியை꞉ (சி.சி. மத்ய 17.136). நம்முடைய இந்த ஜட புலன்களுடன் நாம் கிருஷ்ணரை பார்க்க, அவரை தொட வேண்டுமென்றால், அது சாத்தியமல்ல. இந்த புலன்கள் தூய்மைப்படுத்தப்பட வேண்டும். அதை எவ்வாறு தூய்மைப்படுத்துவது? ஸேவோன்முகே ஹி ஜிஹ்வாதௌ: சேவை மூலம். மேலும் எங்கிருந்து சேவை தொடங்கும்? சேவை நாக்கிலிருந்து தொடங்குகிறது, ஜிஹ்வாதௌ. சேவை நாக்கிலிருந்து தொடங்குகிறது. நீங்கள் உச்சாடனம் செய்யுங்கள். ஆகையினால் உச்சாடனம் செய்ய உங்களுக்கு ஜெபமாலையை நாங்கள் அளிக்கிறோம். அதுதான் சேவையின் ஆரம்பம்: உச்சாடனம். நீங்கள் உச்சாடனம் செய்தால், பிறகு ஸ்வயம் ஏவ ஸ்புரத்ய் அத꞉. கிருஷ்ணரின் நாமத்தை கேட்பதால், நீங்கள் கிருஷ்ணரின் திருஉருவத்தை புரிந்துக் கொள்வீர்கள், கிருஷ்ணரின் தரத்தை புரிந்துக் கொள்வீர்கள், கிருஷ்ணரின் பொழுது போக்குகளை, அவருடைய சர்வ வல்லமையை புரிந்துக் கொள்வீர்கள். அனைத்தும் வெளிப்படுத்தப்படும்."
|