"ஹ்ருʼஷீகேண-ஹ்ருʼஷீகேஷ-ஸேவனம் (சி.சி. மத்ய 19.170). உண்மையில் புலன்களின் உரிமையாளர் கிருஷ்ணர் தான். நமக்கு இந்த கைகள் இருக்கின்றன, ஆனால் இது நமக்கு அளிக்கப்பட்டது. உண்மையில் இது கிருஷ்ணரின் கைகள். அவர் எங்கும் வியாபித்திருக்கிறார். ஸர்வதோ (அ)பாணி பாதஸ் தத்: 'எங்கும், அவருடைய கைகளும் கால்களும் இருக்கின்றன'. நீங்கள் பகவத் கீதையில் காணலாம் (ப.கீ. 13.14). ஆகையினால் நமக்கு இருக்கும் இந்த கைகளும் கால்களும், இது கிருஷ்ணரின் கைகளும் கால்களும். எனவே இந்த கிருஷ்ணரின் கைகளும் கால்களும் கிருஷ்ணரின் சேவையில் ஈடுபடும்போது, அது முழுமையாகும். அதுதான் குறையின்மை. நம்முடைய, நம் புலன்கள்... நாம் பயன்படுத்துவது போல்..., நம் புலன்களை நம் சொந்த திருப்திக்காக பயன்படுத்த விரும்புகிறோம், அதேபோல்... ஆனால் உண்மையில் இந்த புலன்கள் நமமுடையதல்ல; அது கிருஷ்ணருடையது."
|