TA/700623 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஒருவர் கிருஷ்ண உணர்வில் முன்னேற்றம் அடைந்தால் அவருடைய வேலை யாதெனில், 'நான் என் நேரத்தை வீனாக கழிக்கிறேனா?' என்று பார்ப்பதுதான். அது முன்னேற்றம் அடைந்த பக்தனின் ஓர் அடையாளம். அவ்யர்த காலத்வம். நாம-கானே ஸதா ருசி (சி.சி. மத்ய 23.32). எப்பொழுதும் ஜெபித்தலில் ஈடுபாடு. ப்ரீதிஸ் தத்-வஸதி ஸ்தலே: (சி.சி. மத்ய 23.18-19) மேலும் கிருஷ்ணர் வாழும் கோவிலில் வாழ, வஸதி, கவர்ச்சி அல்லது ஈடுபாடு கொள்வது. கிருஷ்ணர் எங்கும் வாழ்கிறார், ஆனால் குறிப்பாக, நமக்கு சந்திக்கும் வாய்ப்பை அளிக்க, அவர் கோவிலில் அல்லது வ்ருʼந்தாவன போன்ற இடங்களில் வாழ்கிறார். எனவே ப்ரீதிஸ் தத்-வஸதி ஸ்தலே. ஒருவர் கிருஷ்ணர் வாழும் இடத்தில் வாழ்வதில் ஈடுபடும் மேம்படுத்தப்பட்டவராக இருக்க வேண்டும். ப்ரீதிஸ் தத்-வஸ... நாம-கானே ஸதா ருசி. புனிதமான பெயரை எப்பொழுதும் பாடும் சுவையை பெற்றிருக்க வேண்டும்."
700623 - சொற்பொழிவு NOD - லாஸ் ஏஞ்சல்ஸ்