"நீங்கள் ஏறி இறங்க முயற்சி செய்கிறீர்கள். நீங்கள் சந்திர கிரகத்திற்கு, சூரிய கிரகத்திற்கு, மிக உயரத்திற்குச் செல்ல முயற்சி செய்கிறீர்கள், அல்லது நீங்கள் கீழே இறங்க முயற்சி செய்யலாம். ஆனால் வெறுமனே ஏறி இறங்குவதால் நீங்கள் அடைய முடியாத ஒறு விஷயம் இருக்கிறது, ப்ரமதாம் உபர்ய் அத꞉. நீங்கள் அந்த விஷயத்திற்கு முயற்சி செய்ய வேண்டும்: தஸ்யைவ ஹேதோ꞉ ப்ரயதேத கோவிதோ, ந லப்யதே யத் ப்ரமதாம் உபர்ய் அத꞉. வெறுமனே ஏறி இறங்குவதால் நீங்கள் அதை அடைய முடியாது. மேலும் அது என்ன? நி꞉ஷ்ரேயஸாய, மிக உயர்ந்த பலன். அந்த மிக உயர்ந்த பலன் என்ன? அந்த உயர்ந்த பலன் என்னவென்றால் உங்கள் பிறப்பையும் மேலும் இறப்பையும் நிறுத்திவிட்டு பரமபதம் அடைவது, இறைவனை சென்று அடைவது. அதுதான் வேண்டும்."
|