"அது ஒருவருடைய தேர்வைப் பொறுத்தது. உங்களுக்கு பிடித்திருந்தால், ஸந்யாஸ ஆஷ்ரமத்தை ஏற்றுக் கொள்வதால் கிருஷ்ண உணர்வில் முன்னேற்றம் அடைய வசதியாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால், பிறகு அதை ஏற்றுக் கொள்ளலாம். வெறுமனே விளம்பரத்திற்காக அதை ஏற்றுக் கொள்ளாதீர்கள். ஆனால் நீங்கள் நினைத்தால், அதாவது 'நான் குடும்பத்தினருடன் வாழ்ந்தால், ஓ, அது கிருஷ்ண உணர்வில் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்', பிறகு அந்த முறைப்படி வாழுங்கள். நீங்கள் ஸந்யாஸீயாக அல்லது ஒரு ப்ரஹ்மசாரீயாக வேண்டும் அப்போழுது தான் உங்களால் உணர முடியும் என்ற கட்டுப்பாடு இல்லை. இல்லை. எந்த தளத்திலும், உங்கள் நோக்கம் கிருஷ்ணர் மேலும் விஷ்ணுவானால், அது உங்கள் சொந்த ஆர்வம்."
|