"அதனால் பௌதிக விஞ்ஞானிகள் ஆத்மா என்று ஒன்று இல்லை எனக் கூறுகின்றனர், ஏனென்றால் அவர்களால் பார்க்க முடியவில்லை. அவர்களது உபகரணங்களாலோ அவர்களது அறிவாலோ அது சாத்தியமில்லை. அபஷ்யதாம். அவர்கள் அதை பார்ப்பதில்லை. அதனால் நமது கண்களை நம்மால் நம்ப முடியாது. இந்த கண்கள் எதை பார்ப்பதற்கும் பொருத்தமானதல்ல. அது குறிப்பிட்டதொரு சூழ்நிலையில் குறிப்பிட்டதொரு தோற்றத்தைத் தருகிறது. இல்லாவிட்டால்... சாதுக்கள் கண்களால் பார்க்கப்படக் கூடாது மாறாக காதுகளால் பார்க்கப்பட வேண்டும் என்று எனது குருமகராஜர் சொல்வதுண்டு. பார்ப்பதற்கென வெவ்வேறு வழிமுறைகள் உள்ளன. கண்களே எல்லாவற்றையும் பார்ப்பதற்கு போதுமானதென நம்பிவிட வேண்டாம். இல்லை."
|