"பௌதிக மாசுபடுதல் என்றால் இந்த பௌதிக உலகில் அனுபவிக்க ஆசைபடுவது. அதுதான் மாசுபடுதல். இந்த பௌதிக உலகில் நாம் செய்வதற்கு ஒன்றும் இல்லை. ப்ரஹ்ம-பூத꞉. நீங்கள் ஆன்மா. எதிர்பாராதவிதமாக, (நாம்) இந்த சேர்க்கையில் இணைக்கப்பட்டுவிட்டோம். எனவே அது மற்றொறு அத்தியாயம். ஆனால் இப்பொழுது நாம் அதிலிருந்து வெளியே வர முயற்சி செய்கிறோம். அதே நேரத்தில் நான் வீடுபேறு அடைய, இறைவனை சென்று அடைய முயற்சித்துக் கொண்டிருக்கிறேன், அதே நேரத்தில் சில ஜட புலன் நுகர்வில் விருப்பம் கொண்டுள்ளேன், இது மற்றொரு குற்றம். இதைச் செய்திருக்கக் கூடாது. நாம் கண்டிப்பாக மறக்க முயற்சி செய்ய வேண்டும். நாம் மறக்க முயற்சி செய்யலாம், 'இனிமேலும் நான்... இல்லை. என்னுடைய பௌதிக இன்பத்திற்கு அவசியம் இல்லை'. அத்தகைய சபதம், உறுதி, அங்கு இருக்க வேண்டும்."
|