"நவீன நாகரீகம் குறைபாடுகள் நிறைந்தது. சமூகத்தை எவ்வாறு பராமரிப்பது என்று அவர்களுக்குத் தெரியாது. ஆகையினால் அங்கு அமைதியில்லை. முக்கியமாக அங்கு மூளை தேவைப்படுகிறது. பைத்தியம். எவ்வாறு என்றால், உடலின் முழுமையிலும், தலைதான் மிகவும் முக்கியமானது. உங்கள் கையை வெட்டினால், நீங்கள் வாழலாம், ஆனால் உங்கள் தலையை வெட்டினால், நீங்கள் வாழ முடியாது. பிறகு அனைத்தும் முடிந்துவிடும். அதேபோல், தற்போதைய தருணத்தில் சமூகம் தலையற்றிருக்கிறது, பிணம், அல்லது தலை வெடித்துள்ளது, பைத்தியம். அங்கு தலை இருக்கிறது, முட்டாள்தனமான தலை. முட்டாள்தனமான தலை. முட்டாள்தனமான தலையால் என்ன பயன்? ஆகையினால் மூளையும் தலையும் உள்ள ஒரு வகுப்பை உருவாக்கும் ஒரு பெரும் தேவை இருக்கிறது. அதுதான் கிருஷ்ண பக்தி இயக்கம்."
|