இங்கு பன்னிரெண்டு மாதங்கள் இருக்கின்றன, ஆனால் நமக்கு பெரிதாக இருபத்து நான்கு திருவிழாக்கள் உள்ளன... ரத-யாத்ரா திருவிழா போன்று பெரியது. எனவே நீங்கள் கனிவாக அதை மேற்கொண்டால், பிறகு பகவான் சைதன்ய பிரபு அறிவுறுத்தியது போல, கீர்தனீய꞉ ஸதா ஹரி꞉ (சி.சி. அதி 17.31), நீங்கள் எப்பொழுதும் கிருஷ்ண உணர்வில் இருப்பீர்கள், உங்களுடைய விரக்தி மற்றும் குழப்பத்திற்கு வாய்ப்பு இருக்காது. முக்கியமாக இந்த காரணத்திற்காக தான் நான் இந்த கூட்டத்திற்கு வந்தேன், ஆகையால் நீங்கள் கனிவோடு இதை ஏற்றுக் கொள்ளுங்கள், நான் சொல்ல வந்தது, பணிவான அறிவுறுத்தல், அதாவது நீங்கள் எங்கிருந்தாலும், எத்தகைய நிலையிலும், எந்த சூழ்நிலையிலும், நீங்கள் அன்புடன் இந்த பதினாறு பெயர்களை உச்சாடனம் செய்யுங்கள் (எல்லோரும் உச்சாடனம் செய்கிறார்கள்), ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா, ஹரே ஹரே/ ஹரே ராமா, ஹரே ராமா, ராமா ராமா, ஹரே ஹரே.
|