"உங்களால் மக்களை, கிருஷ்ண பக்தர்களாக மாற்ற முடிந்தால், பிறகு அனைத்தும் தானாக நடக்கும். ஏனென்றால் ஜனநாயகம் அங்கிருக்கிறது. எனவே அவர்கள் ஒரு கிருஷ்ண பக்தருக்கு ஜனாதிபதியாகவும் மேலும் பிரதமராகவும் வருவதற்கு வாக்களித்தால், பிறகு அனைத்தும் காப்பாற்றப்படும். எனவே அதன் பொருள் என்னவென்றால் நீங்கள் கிருஷ்ண உணர்வுள்ள வாக்காளர்களை உருவாக்க வேண்டும். பிறகு அனைத்தும் சரியாக வந்துவிடும். அதுதான் உங்கள் கிருஷ்ண உணர்வு இயக்கத்தின் நோக்கங்களில் ஒன்றாக இருக்க வேண்டும். அரசாங்கம் இன்னமும் பொது மக்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அதுதான் உண்மை. பொது மக்கள் கிருஷ்ண பக்தர்களானால், இயற்கையாக அரசாங்கமும் கிருஷ்ண பக்தர்களாகிவிடும். ஆனால் அது பொது மக்களைச் சார்ந்துள்ளது. ஆனால் அவர்கள் அவ்வாறு மாற விரும்பவில்லை."
|