"எனவே நாம் அந்த நிலைக்கு தயாராக வேண்டும், எவ்வாறு வீடுபேறு அடைவது, எவ்வாறு மீண்டும் கிருஷ்ணருடன் செல்வது, மேலும் அவருக்கு சேவை செய்வதில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். பிறகு தாயாகவா அல்லது நண்பராகவா என்ற கேள்விக்கு... அது பின்னர் கருத்தில் கொள்ளப்படும். முதலில் பகவானின் இராச்சியத்திற்குள் எவ்வாறு நுழைவது என்று முயற்சி செய்து பார்ப்போம். அதில் நிபந்தனை, ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம்ʼ ஷரணம்ʼ (ப.கீ. 18.66), அதாவது 'உன்னுடைய மற்ற ஈடுபாடுகள் அனைத்தையும் விட்டுவிட்டு நீ என்னிடம் முழுமையாக சரணடைந்துவிடு. பிறகு உன்னை என் பொறுப்பாக ஏற்றுக் கொள்கிறேன்'. அஹம்ʼ த்வாம்ʼ மோக்ஷயிஷ்யாமி. மோக்ஷ அங்கிருக்கிறது. ஒரு கிருஷ்ண பக்தனுக்கு மோக்ஷ, அல்லது முக்தி என்பது ஒரு பொருட்டல்ல. அவர் அதைச் செய்வார். அவர் அதைப் பார்த்துக் கொள்வார்."
|