"ஈஷ்வர꞉ ஸர்வ-பூதானாம்ʼ ஹ்ருʼத்-தேஷே (அ)ர்ஜுன திஷ்டதி (ப.கீ. 18.61). அவர் எல்லோருடைய இதயத்திலும் அமர்ந்திருக்கிறார். அண்டாந்தர-ஸ்த-பரமாணு சயாந்தர-ஸ்தம் (ப்.ஸ. 5.35). அவர் இந்த பிரபஞ்சத்தினுள் இருக்கிறார், மேலும் அவர் அணுவினுள்ளும் இருக்கிறார். அதுதான் பரமாத்மா உணருதல். எங்கும், அனைத்திலும் வியாபித்திருக்கிறார். அகிலாத்ம-பூதோ. கோலோக ஏவ நிவஸத்ய் (ப்.ஸ. 5.37). அவர் அவருடைய கோலோக வ்ருʼந்தாவன-தாமில் நிலைப் பெற்றிருந்தாலும், அவர் எங்கும் இருக்கிறார். அந்த எல்லா இடங்களிலும் உள்ள அம்சம்தான் பரமாத்மா. மேலும் அந்த கோலோக வ்ருʼந்தாவன-ஸ்திதி தான் பகவான்."
|