"எனவே நாங்கள் பகவான் கிருஷ்ணரின் செய்தியை, பகவத் கீதையை சொற்பொழிவாற்றுவதில் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறோம். நாங்கள் பகவத் கீதையை உண்மையுருவில், எவ்விதமான தவறான விளக்கமும் இல்லாமல் அளிக்கின்றோம். பகவானின் சொற்களை நாம் பொருள் மாற்றி விளக்கக் கூடாது. ஏனென்றால் மதம் என்றால் பகவானின் சொற்கள். தர்மம்ʼ து ஸாக்ஷாத் பகவத்-ப்ரணீதம் (ஸ்ரீ.பா. 6.3.19). எப்படி சட்டம் குடிமகனால் தயாரிக்கப்பட முடியாதோ அதேபோல், மதத்தின் கொள்கைகள் எந்த மனிதனாலும் தயாரிக்க முடியாது. சட்டம் அரசாங்கத்தால் தயாரிக்கப்படுகிறது. அந்த சட்டம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அது கட்டாயமானது. அதேபோல், மதம் என்றால் பகவானின் சொற்கள்."
|