"யம்ʼ யம்ʼ வாபி ஸ்மரன் லோகே த்யஜத்ய் அந்தே கலேவரம் (ப.கீ. 8.6). இந்த பயிற்சி என்றால் மரண நேரத்தில், ஒருவரால் கிருஷ்ணர், நாராயண, இவர்களை நினைவில் கொள்ள முடிந்தால், பிறகு அவருடைய வாழ்க்கை முழுதும் வெற்றிதான். மரண நேரத்தில். ஏனென்றால் மனநிலை, மரண நேரத்தில் உள்ள மன நிலை, அவனை அடுத்த பிறவிக்கு கொண்டு செல்லும். காற்றினால் நறுமணச் சுவை கொண்டு செல்லப்படுகிறது, அதேபோல், என்னுடைய மனநிலை வேறுபட்ட வகையான உடலுக்கு என்னைக் கொண்டு செல்லும். நான் என் மனநிலையை வைஷ்ணவ, தூய்மையான பக்தர்களைப் போல் உருவாக்கியிருந்தால், பிறகு நான் உடனடியாக வைகுண்டத்திற்கு பரிமாற்றம் செய்யப்படுவேன். என் மனநிலையை சாதாரண கர்மீயைப் போல் உருவாக்கியிருந்தால், பிறகு நான் இந்த பௌதிக உலகில் தங்கி நான் உருவாக்கிய மனநிலையில் அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டும்."
|