"எந்த திறனிலும் கிருஷ்ணர் வழிபாடு செய்யப்படலாம், கிருஷ்ணர் நேசிக்கப்படலாம். கோபீகள் வெளித்தோற்றத்தில் காமத்துடன், காம ஆசைகளுடன் கிருஷ்ணரை நேசித்தனர், மேலும் ஷிஷுபால கிருஷ்ணரை கோபத்தில் நினைத்தார். காமாத் க்ரோதாத் பயாத். மேலும் கம்ஸா பயத்தின் காரணதால் எப்பொழுதும் கிருஷ்ணரை நினைத்தார். மேலும் நிச்சயமாக அவர்கள் பக்தர்கள் அல்ல. பக்தர்கள் என்றால் அவர்கள் எப்பொழுதும் கிருஷ்ணருக்கு சாதகமாக இருப்பார்கள், விரோதமாக அல்ல. ஆனால் கிருஷ்ணர் மிகவும் கருணைமிக்கவர், யாராவது விரோதமான அணுகுமுறையில் அவரை ஒழித்துக்கட்ட நினைத்தாலும், அவனுக்கும் வீடுபேறு கிடைக்கிறது."
|