"எனவே இந்த இயக்கம் மிகவும் முக்கியமான இயக்கம். அனைவரும் இதை தீவிரமாக கற்று மேலும் செயல்படுத்த வேண்டும். பௌதிக இருப்பின் மாயையான யோசனைகளால் தாக்கப்படாமல் இருங்கள். ஸர்வோபாதி-விநிர்முக்தம் (சி.சி. மத்ய 19.170). இது மிகவும் சுலபம். நீங்கள் வெறுமனே ஹரே கிருஷ்ணா மஹா மந்திரத்தை உச்சாடனம் செய்தால், சைதன்ய மஹாபிரபு கூறுகிறார், சேதோ-தர்பண-மார்ஜனம் (சி.சி. அந்த்ய 20.12)— உடனடியாக உங்கள் இதயத்திலிருக்கும் தவறான கருத்துக்கள் தூய்மைப்படுத்தப்படும். இதுதான் தவறான கருத்து: "நான் இந்த உடல்." "நான் அமெரிக்கன்," "நான் இந்தியன்," "நான் ப்ராஹ்மண," "நான் குஜராத்தி," "நான் பெங்காளி." இவை அனைத்தும் தவறான கருத்து. நீங்கள் பகவான், கிருஷ்ணரின் அங்க உறுப்பு. அதுதான் உங்கள் அடையாளம்."
|