"ஷாஸ்த்ரத்தில் பன்னிரண்டு அதிகாரிகள் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரம்மா ஒரு அதிகாரி, பகவான் சிவா மற்றொருவர் மேலும் நாரதர் ஒரு அதிகாரி. பிறகு மனுவும் ஒரு அதிகாரி, ப்ரஹ்லாத மஹாராஜ ஒரு அதிகாரி, ஷுகதேவ கோஸ்வாமீ ஒரு அதிகாரி. எனவே அதேபோல், யமராஜாவும் ஒரு அதிகாரி. அவர்கள் பகவான், அல்லது கிருஷ்ணர் யார் என்று சரியாக அறிந்திருக்கும் அதிகாரிகள் மேலும் அவர்கள் வழிகாட்டக் கூடியவர்கள். ஆகையினால் நீங்கள் அதிகாரிகளை பின்பற்ற வேண்டும் என்று ஷாஸ்திரம் கூறுகிறது. இல்லையெனில் அது சாத்தியமல்ல. தர்மஸ்ய தத்த்வம்ʼ நிஹிதம்ʼ குஹாயாம்ʼ மஹாஜனோ யேன கத꞉ ஸ பந்தா꞉ (சி.சி. மத்ய 17.186). உங்கள் மனத்தின் யூகத்தால் மதத்தின் வழியை நீங்கள் புரிந்துக் கொள்ள முடியாது. தர்மாம்ʼ து ஸாக்ஷாத் பகவத்-ப்ரணீதம் (ஸ்ரீ.பா. 6.3.19). தர்ம, மதக் கொள்கைகள், முழு முதற் கடவுளால் இயற்றப்பட்டது. சாதாரண மனிதனால் தர்மத்தைப் இயற்ற முடியாது."
|