"குரு என்றால் வேத அறிவை நன்குணர்ந்த சில ஆளுமைகளை நீங்கள்
கண்டுபிடிக்க வேண்டும். ஷாப்தே பரே ச நிஷ்ணாதம்ʼ ப்ரஹ்மண்ய் உபஷமாஷ்ரயம். இவைதான் குருவிற்கான அறிகுறிகள்: அவர் நன்குணர்ந்தவர், வேதத்தின் முடிவுரையை எல்லாம் நன்கு அறிந்தவர். அவர் நன்குணர்ந்தவர் மட்டுமல்ல, ஆனால் அவருடைய வாழ்க்கையில் உண்மையில் அந்த வழியை பின்பற்றுகிறார், உபஷமாஷ்ரயம், மற்ற வழிகளால் விலகிச் செல்வதில்லை. உபஷம, உபஷம. அவர் அனைத்து பௌதிக ஏக்கத்தையும் முடித்துக் கொண்டுவிட்டார். அவர் வெறுமனே ஆன்மீக வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு மேலும் முழு முதற் கடவுளிடம் சரணடைந்துவிட்டார். மேலும் அதே நேரத்தில், அவர் வேதத்தின் அனைத்து முடிவுரையையும் அறிந்திருந்தார். இதுதான் ஒரு குருவின் விளக்கம்."