"ஸ்ரீமத் பாகவதத்தில் ஒரு வார்த்தை உள்ளது, உரு-தாம்னி பத்தா꞉. உரு. உரு என்றால் மிகவும் வலுவான, மேலும் தாம்னி என்றால் கயிறு. எவ்வாறு என்றால், உங்கள் கைகளும் கால்களும் ஒரு வலுவான கயிற்றால் கட்டப்பட்டிருந்தால், நீங்கள் ஆதரவற்று இருப்பீர்கள், நம் நிலையும் அவ்வாறுதான். இந்த முக்கியமான வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது, உரு-தாம்னி பத்தா꞉. ந தே விது꞉... மேலும் இத்தகைய பத்தா꞉, கட்டுண்ட ஆத்மாக்கள், அவர்கள் விடுதலை பிரகடனம் செய்கிறார்கள்: "எனக்கு யாரைப் பற்றியும் கவலை இல்லை. எனக்கு பகவானைப் பற்றியும் கவலை இல்லை." எத்தகைய முட்டாள்தனம். எவ்வாறு என்றால், சில நேரங்களில் பொல்லாத பிள்ளைகள், அவர்களும் கட்டப்படுகிறார்கள். யஷோதாமயீயும் கிருஷ்ணரை கட்டிப்போட்டார்கள். அது இந்திய முறை, எங்கும், (சிரிக்கிறார்) கட்டிப்போடுவது. மேலும் அந்த சின்ன குழந்தை, அவன் கட்டப்பட்டிருக்கும் போது, அவன் விடுதலை பிரகடனம் செய்தால், அது எவ்வாறு சாத்தியமாகும்? அதேபோல், இயற்கை அன்னையின் சட்டத்தால் நாம் கட்டுண்டிருக்கிறோம். நீங்கள் எவ்வாறு விடுதலை பிரகடனம் செய்ய முடியும்? நம் உடலின் ஒவ்வொரு பகுதியும் ஒரு சில கட்டுபாடு செய்யுநர்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. அது பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது."
|