"எனவே அனைத்து மதமும், எந்த மதத்திலும், இருக்கும் மிக உயர்ந்த கொள்கைகள் வைஷ்ணவிதேஸில், அல்லது கிருஷ்ண உணர்வை பின்பற்றுபவர்களிடம் இருக்கிறது. ஏதேனும் சிறந்த விஷயம், எந்த மதத்தில் இருந்தாலும், கிருஷ்ண உணர்வில் அது இருப்பதை நீங்கள் காணபீர்கள். எனவே அது குறைபாடில்லாதது. புத்த மதம் அஹிம்ʼஸாவை கற்பிக்கிறது; கிருஷ்ண பக்தி மக்கள் அஹிம்ʼஸாவை பின்பற்றுபவர்கள். பகவான் ஏசு கிறிஸ்துநாதர் பகவானின் அன்பை பற்றி கற்பிக்கிறார்; அவர்கள் பகவானின் மீது சிறந்த அன்பை கொண்டவர்கள். மேலும் இந்து மதம் முக்தி பெறுவதை கற்பிக்கிறது; அவர்கள்... அவர்கள் கிருஷ்ண பக்தர்களானவுடனே, அவர்கள் முக்தி பெறும் நிலை அடைகிறார்கள். உடனடியாக. முக்தி நிலையை அடைய கேள்வி கேட்க இடமில்லை."
|