"ஆக கிருஷ்ண பக்தி இயக்கம் என்றால் கிருஷ்ணரை புரிந்துக் கொள்வது, ஒருவர் கிருஷ்ணருடனான தன்னுடைய உறவுமுறையின் நிலையை புரிந்துக் கொண்டு, மேலும் அதற்கேற்ப நடந்துக் கொண்டு அத்துடன் வாழ்க்கையின் உயர்ந்த முழுமையை அடைய வேண்டும். அதுதான் ப்ரயோஜன. ஷன்ஸ்க்ரித்தில் அது ஸம்பந்த, அபிதேய மேலும் ப்ரயோஜன என்று அழைக்கப்படுகிறது. முதலில் நமக்கும் கிருஷ்ணருக்கும், அல்லது பகவானுக்கும் உள்ள உறவுமுறை என்ன என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும்; பிறகு அபிதேய— பிறகு அந்த உறவுக்கேற்ப நாம் நடந்துக் கொள்ள வேண்டும். மேலும் நாம் ஒழுங்காக நடந்துக் கொண்டால், பிறகு வாழ்க்கையின் இறுதி இலக்கு சாதிக்கப்படும். அந்த வாழ்க்கையின் இறுதி இலக்கு என்பது என்ன? வாழ்க்கையின் இறுதி இலக்கு என்பது வீடுபேறு அடைவது, மீண்டும் இறைவனை சென்று அடைவது."
|