"கிருஷ்ணருடன் நமது உண்மையான உறவுமுறையை நாம் மறந்துவிட்டோம்; ஆகையினால் சில நேரங்களில் கிருஷ்ணர் தனிப்பட்ட முறையில் தானே வருகிறார், எவ்வாறு என்றால் கிருஷ்ணர் வந்தார், அத்துடன் அவர் கற்பித்தார். அவர் தனக்கு பிறகு, அவருக்கும் நமக்கும் உள்ள உறவை நினைவூட்ட பகவத் கீதையை விட்டுச் சென்றார், மேலும் அவர் கேட்டுக் கொண்டார் அதாவது "தயவுசெய்து பன்றியைப் போல் உள்ள உங்கள் முட்டாள்தனமான ஈடுபாடுகள் அனைத்தையும் விட்டுவிடுங்கள். தயவுசெய்து என்னிடம் வந்துவிடுங்கள்; நான் உங்களுக்கு பாதுகாப்பு அளிப்பேன்," ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய (ப.கீ. 18.66). அதுதான் கிருஷ்ணரின் வேலை, ஏனென்றால் அனைத்து ஜீவாத்மாக்களுக்கும் கிருஷ்ணர் தந்தையாவார். அனைத்து உயிர்வாழிகளும் இந்த பௌதிக உலகில் பன்றிகளாக அழுகிப் போவதில் அவருக்கு சந்தோஷம் இல்லை. ஆகையினால் அதுதான் அவருடைய வேலை. அவர் சில நேரங்களில் தனிப்பட்ட முறையில் தானே வருகிறார், அவர் தன்னுடைய பிரதிநிதியை அனுப்புகிறார், அவர் தன்னுடைய மகனை அனுப்புகிறார், பகவான் ஏசுநாதரைப் போல். அவர் தான், கிருஷ்ணரின் மகன் என்று கூறுகிறார். அது சாத்தியமே, அதாவது... எல்லோரும் மகன்தான், ஆனால் இந்த மகன் என்றால் குறிப்பாக விருப்பமான மகன், ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அனுப்பப்பட்டு அங்கிருப்பவர்களை மீட்டு வீடுபேறு பெற்று, இறைவனிடம் சென்றடைய செய்வது."
|