"எவ்வாறு என்றால், இங்கேயும் சொல்லியிருப்பது போல் அதாவது "நான் ஒரு கடனாளி, அத்துடன் நான் பணம் செலுத்தவில்லை என்றால், நான் கைதி செய்யப்படுவேன் அல்லது நான் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுவேன், சட்டத்தால்." மேலும் அங்கே சொல்லப்பட்டுள்ளது அதாவது ஸ தத்-பலம்ʼ புங்க்தே, அதாவது நீங்கள் ஏமாற்றியது போல், இந்த வாழ்க்கையில் துன்பப்படுவது போல், அதேபோல், ததா தாவத் அமுத்ர வை, அதேபோல் ஒருவர் அடுத்த பிறவியிலும் துன்பப்பட வேண்டும். ஏனென்றால் வாழ்க்கை நித்தியமானது, மேலும் நாம் உடலை மாற்றிக் கொண்டிருக்கிறோம், ததா தேஹாந்தர-ப்ராப்தி꞉ (ப.கீ 2.13). இந்த விஷயங்கள் கற்றறிந்தவர்கள் என்று அழைக்கப்படுபவர்களுக்கு இடையில் விவாதிக்கப்படுவதில்லை, அதாவது வாழ்க்கை தொடர்ச்சியானது, நாம் ஒவ்வொரு கணமும் உடலை மாற்றிக் கொண்டிருக்கிறோம்; ஆகையினால் நாம் இந்த உடலை மாற்றி, மற்றொரு உடலை ஏற்றுக் கொள்ள வேண்டும், பிறகு மற்றொன்று, மேலும் மற்றொரு உடலை ஏற்றுக் கொள்ள வேண்டும். நான் இந்த அறையில் உட்கார்ந்திருக்கிறேன் என்று வைத்துக்கொள்வோம், நான் இந்த அறையை மாற்றிக் கொண்டு மற்றொரு அறைக்கு சென்றால், நான் என் கடமைகளில் இருந்து விடுபட்டுவிட்டேன் என்று பொருள்படாது."
|