"பூரண பரம உண்மை என்பவர் எவரிடமிருந்து அல்லது யாரிடமிருந்து அனைத்தும் வெளிப்படும். எனவே இந்த குறும்புத்தனம் பகவான் என்னும் அந்த நபரிடமிருந்து அல்லாது எங்கிருந்து வந்தது? பகவானிடம் இல்லையெனில் எங்கிருந்து இந்த திருடும் நாட்டம் வந்தது? ஆனால் அவர் பூரணமானவர் என்பதால், அவருடைய திருட்டும் ஆசீர்வாதத்தை போல் நன்மையானது. மாகன்-சோர. கிருஷ்ணர் வெண்ணெய் திருடிக் கொண்டிருந்தார், அது வழிபாடு செய்யப்பட்டது, மாகன, இதே பெயரால். இதேபோல் மற்றொரு கோவிலில், க்ஷீர-சோர-கோபீநாத. கோபீநாத சுண்டிய பால் திருடன் என்று அறியப்பட்டார், க்ஷீர-சோர. அவர் சோர, திருடன் என்ற பெயரில் பிரபலமானார்."
|