"கிருஷ்ணர் பெண்-வேட்டையாடுபவர். அது தான் அவருடைய உயர்ந்த பொழுது போக்கு, ராஸ-லீலா. ஆனால் இங்கு ஒரு ஆண், பெண்-வேட்டையாடுபவனாக இருந்தால், அவன் மிகவும் அருவருப்பான நபராக இருப்பான். அதுதான் மக்களின் தவறான கருத்து: அவர்கள் கிருஷ்ணரை ஒரு சாதாரண மனிதராக கருதுகின்றனர். அவஜானந்தி மாம்ʼ மூடா (ப.கீ. 9.11). அவர்கள் அயோக்கியர்கள், முட்டாள்கள், மானுஷீம்ʼ தனும் ஆஷ்ரிதம். கிருஷ்ணர், அவர் எவ்வாறு அனைத்து சூழ்நிலையிலும் பூரணமாக இருக்கிறார் என்று- புலன்கள் கற்பிக்கப்பட வேண்டும். கிருஷ்ணர் கற்பிக்கிறார், "சும்மா த்ரோணாசார்யரிடம் சென்று ஒரு சிறிய பொய் சொல்." இப்பொழுது மக்கள் ஆச்சரியப்படுவார்கள், பகவான் யாரிடமோ எவ்வாறு இப்படி சொல்லிக் கொடுக்கிறார் அதாவது "நீ சென்று இந்த பொய்யைச் சொல்". எனவே அவர்கள் குழப்பமடைந்தனர். எனவே உண்மையில் அனைத்து சூழ்நிலையிலும் கிருஷ்ணரின் நிலை என்ன என்பதை ஒருவர் புரிந்துக் கொள்ள வேண்டும். அதற்கு புத்திசாலித்தனம் தேவை."
|