"வேத நிபந்தனையின் முழு நோக்கமும் யாதெனில் 'நான் இந்த ஜட உடல் அல்ல; நான் ஆன்மீக ஆத்மா', என்பதை புரிந்துக் கொள்வதற்கே. மேலும் இந்த உண்மையான நிலையை புரிந்துக் கொள்ள, தர்ம-ஷாஸ்தரத்தில் பல வழிகள், அல்லது வேத புத்தகங்கள் இருக்கின்றன. அத்துடன் இங்கே யமதூத அல்லது யமராஜ பேசுவதை நீங்கள் காண்பீர்கள், தர்மம்ʼ து ஸாக்ஷாத் பகவத்-ப்ரணீதம் (ஸ்ரீ.பா. 6.3.19). உண்மயில், முதலில், நான் சொல்ல நினைப்பதாவது, மதக் கொள்கைகள் முழு முதற்கடவுளால் சீராக்கப்படுகிறது. ஆகையினால் கிருஷ்ணர் சில நேரங்களில் தர்ம-ஸேது என்று அழைக்கப்படுகிறார். ஸேது என்றால் பாலம். நாம் அதை கடந்து செல்ல வேண்டும். அதன் முழு திட்டமும் யாதெனில் நாம் இப்போது விழுந்திருக்கும் அறியாமை என்னும் சமுத்திரத்தை கடந்து செல்ல வேண்டும். பௌதிக இருப்பு என்றால் அது அறியாமை நிறைந்த சமுத்திரம், மேலும் ஒருவர் அதை கடந்து செல்ல வேண்டும். பிறகு அவருக்கு அவருடைய உண்மையான வாழ்க்கை கிடைக்கும்."
|