TA/710117b உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் அலகாபாத் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"சூரியன் கிழக்கில் உதிப்பதை ஒரு குழந்தை தினமும் காண்பதைப் போல்— ஆகையினால் கிழக்கு திசை சூரியனின் தந்தையாகும். கிழக்கு திசை சூரியனின் தந்தையா? சூரியன் எப்பொழுதும் அங்கிருக்கிறது, ஆனால் காலையில் அது கிழக்கு திசையிலிருந்து தோன்றுவதை நீங்கள் காண்பீர்கள். அவ்வளவுதான். அது உங்கள் பார்வையின் கோணம். சூரியன் கிழக்கு திசையில் பிறப்பு எடுக்கிறது என்பதல்ல. சூரியன் எப்பொழுதும் வானத்தில் உள்ளது. அதேபோல், கிருஷ்ணர் எப்போதும் அங்கிருக்கிறார், ஆனால் முட்டாள்களின் பார்வைக்கு அவர் பிறந்திருப்பது போல் தோன்றும். அஜோ (அ)பி ஸன்ன் அவ்யயாத்மா. அஜோ (அ)பி: "எனக்கு பிறப்பில்லை." அஜ꞉. இந்த குறிப்பிட்ட சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அஜோ (அ)பி ஸன்ன் அவ்யயாத்மா பூதானாம் ஈஷ்வரோ (அ)பி ஸன். எனவே கிருஷ்ணரின் பிறப்பை சாதாரண பிறப்புடன் நீங்கள் எவ்வாறு ஒப்பிடலாம்? கிருஷ்ணரின் பிறப்பைப் பற்றி எவரேனும் அறிந்திருந்தால், அவர் முக்தியின் நிலை அடைவார். ஜன்ம கர்ம மே திவ்யம் யோ ஜானாதி தத்த்வத꞉."
710117 - உரையாடல் - அலகாபாத்