TA/710129 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் அலகாபாத் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"உங்களுக்கு உண்மையில் ஷாந்தி வேண்டுமென்றால், பிறகு நீங்கள்

ஷாந்தியின் இந்த சூத்திரத்தை பகவத் கீதையில் தெளிவாக விளக்கியிருப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்: அதாவது கிருஷ்ணர், அல்லது பகவான், அவர்தான் அனுபவிப்பவர், ஒரே அனுபவிப்பவர். அவர் பூரணமானவர். எவ்வாறு என்றால் இந்த உடலைப் போல் முழுமையானது: கைகால்கள் உடலின் அங்க உறுப்புக்கள், ஆனால் இந்த உடலின் உண்மையான அனுபவிப்பாளர் வயிறுதான். கால்கள் நகருகின்றன, கைகள் வேலை செய்கின்றன, கண்கள் பார்க்கின்றன, காதுகள் கேட்கின்றன. இவை அனைத்தும் முழுமையான உடலின் சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் உண்ணுதல் அல்லது அனுபவிப்பதைப் பற்றிய கேள்வி எழுந்தால், விரல்களோ, காதுகளோ, கண்களோ அல்லாது வயிறு மட்டும் தான் அனுபவிப்பாளர். மேலும் நீங்கள் வயிற்றுக்கு உணவுவகைகளை கொடுத்தால், தானாக கண்கள், காதுகள், விரல்கள்—ஏதேனும், உடலின் ஏதேனும் பகுதி—திருப்தி அடையும்."

710129 - சொற்பொழிவு at the House of Mr. Mitra - அலகாபாத்