"நீங்கள் பரம் ப்ரஹ்ம." நாம் ஒவ்வொருவரும், கிருஷ்ணரின் அங்க உறுப்பானதால், நாமும் ப்ரஹ்ம. அது நன்றாக இருக்கிறது. ஆனால் நாம் பரம் ப்ரஹ்ம அல்ல. கிருஷ்ணர் தான் பரம் ப்ரஹ்ம. நாம் ஒவ்வொருவரும் ஈஷ்வரஸ். ஈஷ்வர என்றால் கட்டுப்படுத்துபவர். எவ்வாறு என்றால், இங்கு இன்று இரவு வந்திருக்கும் சிலர், மாஜிஸ்திரேட், நீதிபதி, நீங்கள் கட்டுப்படுத்துபவர்கள்; ஆனால் நீங்கள் பரம கட்டுப்பாளர்கள் அல்ல. இவ்விதமாக யார் பரம கட்டுப்படுத்துபவர் என்று கண்டுபிடியுங்கள். பரம கட்டுப்படுத்துபவர் என்றால் அவர் மற்றவர்களுடைய கட்டளைக்கு கீழ்ப்படிய வேண்டியதில்லை. அவர் பரம கட்டுப்படுத்துபவர். இல்லையென்றால், எல்லோரும் கட்டுப்படுத்துபவர்களாக ஆகிவிடுவார்கள், ஆனால் அவன் மேலதிகாரிகளின் உத்தரவுக்கு கீழ்ப்படிய வேண்டும்."
|