TA/710130c சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் அலகாபாத் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"அனைத்து யோகீகளுக்கு மத்தியில், கிருஷ்ணரை தன் மனத்தில் தொடர்ந்து நினைப்பதில் ஈடுபட்டிருக்கும் ஒரு நபர், த்யானாவஸ்தித-யோகினோ..., பஷ்யந்தி யம்ʼ யோகினோ (ஸ்ரீ.பா.12.13.1). த்யானா என்றால் சிந்தனையை விஷ்ணு அல்லது கிருஷ்ணர் மீது கவனத்தை செலுத்துவது. அதுதான் உண்மையான வாழ்க்கை. ஆகையினால் ஷாஸ்தரத்தில் கூறப்பட்டுள்ளது அதாவது தியானத்தில் ஈடுபட்டிருக்கும் யோகீகள், அவர்கள் விஷ்ணு அல்லது கிருஷ்ணரை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள். கிருஷ்ணரும் விஷ்ணுவும் ஒருவரே. எனவே இந்த கிருஷ்ண உணர்வு இயக்கம் நடைமுறை இயக்கம், கிருஷ்ணரைப் பற்றிய நம்முடைய செயலற்ற உணர்வை புத்துயிர் பெற செய்யும். தந்தையும் மகனும் எப்படி பிரிக்கப்பட முடியாதோ, கிருஷ்ணரிடமிருந்தும் பிரிவே இல்லை. ஆனால் சில நேரத்தில் தந்தையை மறக்க கூடிய நிலை மகனிடமிருந்து வரும். அதுதான் நம்முடைய இன்றைய நிலை."
|
710130 - சொற்பொழிவு at the House of Mr. Mitra - அலகாபாத் |