"ஆகையினால், கிருஷ்ணர், அவருடைய அறுபத்து நான்கு தரத்தில், ஒரு தரம் பஹுதக் ஆனபடியால், அவர் அவ்வாறே அறியப்படுகிறார். இது நம்முடைய பக்தியின் அமிர்தத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. அது என்னவென்றால் அவரால் எவ்வகையான ஜீவாத்மாக்களுடனும் உரையாட முடியும். ஏன் முடியாது? அவர் அனைத்து ஜீவாத்மாக்களுக்கும் தந்தை என்றால், அவருக்கு எப்படி அனைத்து ஜீவாத்மாக்களின் மொழியும் தெரியாமல் போகும்? அது இயற்கையே. தந்தைக்கு மகனின் மொழி நன்றாக புரியம் என்பது உண்மைதானே? இயற்கையாகவே, கிருஷ்ணர் அனைத்து ஜீவாத்மாக்களுக்கும் தந்தை என்றால், அவருக்கு பறவைகள், தேனீக்கள், மரங்கள், மனிதன்—அனைவருடைய மொழியும் தெரிந்திருப்பது இயற்கையே. ஆகையினால் கிருஷ்ணரின் மற்றோரு தரம் பஹுதக். இது கிருஷ்ணர் இருந்தபோது நிரூபிக்கப்பட்டது. ஒரு நாள் கிருஷ்ணர் பேசிக் கொண்டிருந்த பறவைக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார், அப்பொழுது ஒரு மூதாட்டி, யமுனை நதிக்கு தண்ணீர் எடுக்க வந்தாள், அவள் கிருஷ்ணர் பறவையுடன் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து, பிரமித்து போனாள்: "ஓ, கிருஷ்ணா மிகவும் சாமார்த்தியசாலி.""
|