"புனிதமான நாமத்தை உச்சாடனம் செய்வதில் ஈடுபட்டிருக்கும் ஒருவன், அவனுக்கு இது சிறப்பு மிக்க வசதி. அது என்ன? அதற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது அதாவது அவன் நரக நிலையில் உள்ள வாழ்க்கைக்கு செல்லமாட்டான். அதற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. அவன் வாழ்க்கையின் மிகவும் தாழ்ந்த நிலைக்கு இழிவுபடுத்தப்படமாட்டான், விலங்கின் வாழ்க்கை, அல்லது அறியாமை நிறைந்த வாழ்க்கை, தாழ்த்தப்பட்ட மானிட வாழ்க்கைக்கு செல்லமாட்டான், ஆனால் படிப்படியாக முன்னேற்றம் அடைவான். மேலும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது அதாவது யமதூத, யமராஜனின் சேவகர்கள், அவனைக் காண வரமாட்டார்கள் அல்லது அவன் அவர்களை பார்க்கமாட்டான். அவர்கள் கண்களுக்கு தெரியமாட்டார்கள். இதுதான் முடிவு."
|