TA/710131b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் அலகாபாத் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஆகவே கிருஷ்ணர், அல்லது பரம புருஷர், அனைவருடைய இதயத்திலும் குடிகொண்டுள்ளார். எனவே அங்கே பூனைகள், நாய்கள் மேலும் பன்றிகள் இருக்கின்றன—அவர்களும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள், ஜீவாத்மாக்கள்—எனவே கிருஷ்ணர் அவர்களுடைய இதயத்திலும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் பன்றிகளுடன் அருவருப்பான நிலையில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் என்று பொருள்படாது. அவருக்கு சொந்தமான வைகுண்டம் அவருக்கு இருக்கிறது. அவர் செல்லும் இடமெல்லாம் வைகுண்டமே. அதேபோல், ஒருவர் உச்சாடனம் செய்யும் போது, அந்த உச்சாடனம் ... கிருஷ்ணருக்கும் அவருடைய புனித நாமத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லை. மேலும் கிருஷ்ணர் கூறுகிறார், அதாவது "என் தூய்மையான பக்தர்கள் உச்சாடனம் செய்யும் இடத்தில் நான் வாழ்கிறேன்." எனவே கிருஷ்ணர் வரும்போது, கிருஷ்ணர் உங்கள் நாவில் இருக்கும் போது, உங்களால் எவ்வாறு இந்த பௌதிக உலகில் வாழ முடியும்? அது ஏற்கனவே வைகுண்டமாகிவிட்டது, அத்துடன் உங்கள் உச்சாடனம் குற்றமற்றதாக இருக்க வேண்டும்."
710131 - சொற்பொழிவு SB 06.02.48 - அலகாபாத்