"ஓதம் ப்ரோதம் படவத் யத்ர விஷ்வம்-இந்த பிரபஞ்சத் தோற்றமானது இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் பின்னப்பட்ட நூலைப் போன்றது. இரண்டு பக்கமும் நூல்கள் இருக்கின்றன, எப்படியெனில் துணிக்கு இரண்டு பக்கங்கள் இருக்கின்றன; நீளம், அகலம் என இரண்டு பக்கங்களும் நூல்களை கொண்டுள்ளன. இதேபோல முழு பிரபஞ்சத் தோற்றமும் இருக்கின்றது, நீளப் பக்கமும் அகல பக்கமுமாக பரம எஜமானரின் சக்தி இயங்குகின்றது. பகவத் கீதையில் (BG 7.7) ஸூத்ரே மணி-கணா இவ என்று கூறப்பட்டுள்ளது. ஒரு நூலில் மணிகள் அல்லது முத்துக்கள் கோர்க்கப்பட்டுள்ளதைப் போல கிருஷ்ணர் அல்லது பூரண உண்மை ஒரு நூலைப் போன்று இருக்க எல்லா கிரகங்களும் அல்லது எல்லா லோகங்களும், எல்லா பிரபஞ்சங்களும் என எல்லாமே ஒரு நூலில் கோர்க்கப்பட்டுள்ளன, அந்த நூல்தான் கிருஷ்ணர்."
|