"நீங்கள் பேசும் பொழுதும், நீங்கள் ஒரு சொற்பொழிவுக்கு பிரசங்கம் செய்ய சென்றாலும், நீங்கள் பேசினால், அதுவும் உச்சாடனம் செய்வதுதான். மேலும் தானாக அங்கே செவியால் கேட்கப்படும். நீங்கள் உச்சாடனம் செய்யும் போதும் அங்கே கேட்கப்படும். ஷ்ரவணம்ʼ கீர்தனம்ʼ விஷ்ணோ꞉ ஸ்மரணம் (ஸ்ரீ.பா. 7.5.23). அங்கு மனப்பாடமும் செய்யப்படும். நீங்கள் ஸ்ரீமத் பாகவதம், பகவத் கீதை, இவற்றின் முடிவுரைகளை மனப்பாடம் செய்யாவிட்டால், உங்களால் பேச முடியாது. ஷ்ரவணம்ʼ கீர்தனம்ʼ விஷ்ணோ꞉ ஸ்மரணம்ʼ பாத-ஸேவனம் அர்சனம். அர்சனம், இது தான் அர்சனம். வந்தனம், என்பது பிரார்த்தனை வழங்குதல். ஹரே கிருஷ்ணாவும் பிரார்த்தனை தான். ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா: "ஓ கிருஷ்ணா, ஓ கிருஷ்ணாவின் சக்தி, தயவுசெய்து என்னை உனக்கு செய்யும் சேவையில் ஈடுபடுத்து." இந்த ஹரே கிருஷ்ணா வெறுமனே பிரார்த்தனை தான்."
|