TA/710214 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் கோரக்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"அங்கே ஒரு ஆங்கில வார்த்தை இருக்கிறது, நான் நினைக்கிறேன்: "பலவிதம்தான் இன்பத்தின் தாய்." ஆனந்த என்றால் இன்பம் நுகர்தல். இன்பம் நுகர்தல் தனிமையைக் குறிக்காது; அங்கே பலவிதம் இருக்க வேண்டும். அதுதான் இன்பம் நுகர்தல். உங்களுக்கு அனுபவம் இருக்கும் அதாவது பல நிறங்களில் பூங்கொத்து, அது மிகவும் ஆனந்தமாக இருக்கும். மேலும் வெறும் ரோஜாப்பூ மட்டும் இருந்தால், ரோஜாப்பூ அழகான மலராக இருந்தாலும், அது திருப்தி அளிக்காது. ரோஜாவுடன், சில பசுமையான இலைகள், சில புல்கள், தாழ்ந்த தரம், அது பார்வைக்கு அழகாக இருக்கும். எனவே ஆனந்த என்ற கேள்வி வரும் பொழுது... ஏனென்றால் கிருஷ்ணருக்கு வடிவம் உள்ளது, ஸச்-சித்-ஆனந்த-விக்ரஹ (பஸ். 5.1), நித்திய; சித், நிறைந்த அறிவு; மேலும் நிறைந்த ஆனந்தம், பேரின்பம். ஆனந்தமயோ (அ)ப்யாஸாத், வேதாந்த-ஸூத்ர ஸய்ஸ்."
710214 - சொற்பொழிவு CC Madhya 06.151-154 - கோரக்பூர்