TA/710214c சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் கோரக்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"வ்ரஜ-ஜன-வல்லப கிரி-வர-தாரீ. ஆக முதல் வேலை யாதெனில் ராதா-மாதவ. நிச்சயமாக, கிருஷ்ணர் அனைவரின் மீதும் அக்கறை கொண்டவர், முக்கியமாக ராதாராணீ மீது அக்கறை கொண்டவர். ராதா-மாதவ குஞ்ஜ-பிஹாரீ, மேலும் ராதாவுடன் வ்ருʼந்தாவனத்தில் வேறுபட்ட குஞ்ஜ, புதர்களில், அவர் அனுபவிப்பார். பிறகு, யஷோதா-நந்தன. அடுத்து அவர் தன்னுடைய தாயார் யஷோதாவை மகிழ்விக்க விரும்புகிறார். யஷோதா-நந்தன வ்ரஜ-ஜன-ரஞ்ஜன. மற்றும் கிருஷ்ணர் வ்ருʼந்தாவனத்தின் அனைத்து குடியிருப்பாளர்களிடமும் மிகவும் பாசமுள்ளவராக இருந்தார். யஷோதா மற்றும் நந்த மகாராஜாவின் மகன். வயதில் மூத்தவர்கள் அனைவரும் கிருஷ்ணர் மீது அளவுகடந்த அன்பு வைத்திருந்தனர். அவர்கள் அவரை நேசித்தனர். வயதில் மூத்த பெண்களும் மேலும் நபர்களும், கிருஷ்ணரை நேசித்தனர்."
710214 - சொற்பொழிவு Purport to Jaya Radha-Madhava - கோரக்பூர்