TA/710214e உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் கோரக்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இந்த மனித நாகரீகம் முழுவதும் ஏமாற்றுபவர்களும் ஏமாறுபவர்களும் நிறைந்த சமூகம். அவ்வளவுதான். எந்த துறையிலும். மயைவ வ்யாவஹாரிகே (ஸ்ரீ.பா. 12.2.3). உலகம் முழுமையும் இந்த கலியுகத்தில்: மயைவ வ்யாவஹாரிகே. வ்யாவஹாரிகே என்றால் சாதாரண பரிவர்த்தனை, ஏமாற்றுதல் அங்கே இருக்கும். சாதாரணமாக, ஏமாற்றுதல் அங்கே இருக்கும். தினசரி விவகாரம். மிகப் பெரிய விஷயங்களைப் பற்றி சொல்வதற்கில்லை. சாதாரண பரிவர்த்தனை, ஏமாற்றுதல் அங்கே இருக்கும். அது பகவத் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது, மயைவ வ்யவஹரி. எவ்வளவு விரைவில் இந்த காட்சியிலிருந்து வெளியேர முடியுமோ அது நல்லது. அது தான் கிருஷ்ண உணர்வு. நீங்கள் இருக்கும் காலம் வரை, நீங்கள் வெறுமனே ஹரே கிருஷ்ணா உச்சாடனம் செய்து மற்றும் கிருஷ்ணரின் மகிமைகளை போதனை செய்யுங்கள், அவ்வளவு தான். இல்லையெனில், இது ஆபத்தான இடம் என்று உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்."
710214 - உரையாடல் - கோரக்பூர்