"தற்போதைய தருணத்தில், இந்தியா மிகவும் ஏழ்மையான நாடு, வறுமையில் வாடும் நாடு, என்று அறியப்படுகிறது. மக்களுடைய கருத்து யாதெனில், அதாவது "அவர்கள் பிச்சைக்காரர்கள். அவர்களுக்கு கொடுப்பதற்கு ஒன்றும் இல்லை. அவர்கள் வெறுமனே இங்கே பிச்சை எடுக்க வந்திருக்கிறார்கள்." உண்மையில், நம் மந்திரிகள் அங்கு சென்று, மேலும் சில வேண்டுகோளாக: "எங்களுக்கு அரிசி கொடுங்கள்," "எங்களுக்கு கோதுமை கொடுங்கள்," "எங்களுக்கு பணம் கொடுங்கள்," "எங்களுக்கு வீரர்கள் கொடுங்கள்." அது அவர்களுடைய வேலை. ஆனால் இந்த இயக்கம், முதல் முதலாக, இந்தியா அவர்களுக்கு ஏதோ ஒன்று கொடுக்கிறது. அது பிச்சை எடுக்கும் பிரச்சாரம் அல்ல; அது கொடுக்கும் பிரச்சாரம். ஏனென்றால் அவர்கள் இந்த விஷயத்திற்காக ஏங்குகிறார்கள், கிருஷ்ண உணர்வு. இந்த பௌதிக உணர்வை போதுமான அளவிற்கு அனுபவித்துவிட்டார்கள்."
|