"யோசனை என்னவென்றால், புனிதமான பெயரை உச்சாடனம் செய்வது மிகவும் சக்தி நிறைந்தது, அதாவது அது உடனடியாக, அதிர்வை கொடுப்பவருக்கு விடுதலை அளிக்கும். ஆனால் மீண்டும் இழிந்து விழுந்துவிட வாய்ப்புள்ளது, ஆகையினால் அங்கே ஒழுங்குமுறை கொள்கைகள் இருக்கின்றன. அல்லது வேறு வார்த்தையில் கூறுவதென்றால், ஒரு முறை, குற்றமில்லாமல், புனித பெயரை, உச்சாடனம் செய்வதால் ஒருவர் விடுதலை பெறுவார் என்றால், ஒழுங்குமுறை கொள்கைகளை பின்பற்றும் மற்றவர்களைப் பற்றி என்ன சொல்வது. இதுதான் அந்த யோசனை. அது அப்படி அல்ல... ஸஹஜியாஸ் போல். அவர்கள் நினைக்கிறார்கள் அதாவது "உச்சாடனம் செய்வதில் அவ்வளவு சக்தி இருந்தால், நான் சில நேரங்களில் உச்சாடனம் செய்கிறேன்." ஆனால் அவனுக்கு தெரியவில்லை, உச்சாடனம் செய்த பிறகு, அவன் மறுபடியும் விருப்பத்துடன் விழுந்துவிடுகிறான். இது விருப்பத்துடன், நான் சொல்வதாவது, விருப்பத்துடன் கீழ்ப்படியாமை. விருப்பத்துடன் கீழ்ப்படியாமை. ஏனென்றால் எனக்கு தெரியும் அதாவது "நான் புனித பெயரை உச்சாடனம் செய்துவிட்டேன். இப்பொழுது என் வாழ்க்கையின் பாவ எதிர்வினை மறைந்துவிட்டது. பிறகு நான் ஏன் மீண்டும் பாவச் செயல்களை செய்ய வேண்டும்?" அதுதான் இயற்கையான முடிவு."
|