TA/710216b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் கோரக்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஒருவேளை கிருஷ்ணர் இங்கிருந்தால்... எவ்வாறு என்றால் நாம் ஸ்ரீமூர்த்திக்கு மரியாதைக்குரிய வணக்கத்தை வழங்குவது போல. அதேபோல், ஸ்ரீமூர்த்தி அர்ச-அவதார, அவதாரம்... நீங்கள் அர்ச-அவதாரமாக வழிபடும் இந்த ஸ்ரீமூர்த்தி, அர்ச- என்றால் வழிபட வேண்டிய அவதாரம். நம்மால் இந்த கண்களுடன், பௌதிக கண்களுடன், கிருஷ்ணரை பார்க்க முடியாது என்பதால், கிருஷ்ணர் கருணையால், அவர், நாம் பார்க்க கூடிய உருவத்தில் நம்முன் தோன்றுகிறார். அதுதான் கிருஷ்ணரின் கருணை. கிருஷ்ணர் இந்த ஸ்ரீமூர்த்தியில் இருந்து வேறுபட்டவர் அல்ல. அது தவறு. கிருஷ்ணரின் ஆற்றல் என்ன என்பதை புரிந்துக் கொள்ள முடியாதவர்கள், இது ஒரு சிலை என்று நினைக்கிறார்கள், ஆகையினால் அவர்கள் கூறுவது "சிலை வழிபாடு." இது சிலை வழிபாடு அல்ல."
710216 - சொற்பொழிவு at Krsna Niketan - கோரக்பூர்